• July
    20
    Saturday

Main Area

Main



போஸ்டர் ஒட்டுற பையனுக்கு இவ்வளவு அறிவா? களவாணி 2வுக்குபக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் 

DMK
DMK
Loading...

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் திமுக 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவுக்காகப் பரப்புரை மேற்கொள்ளக் களமிறங்கிய ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அனல் பறக்கும் தனது  பிரசாரத்தால் உதயநிதி மக்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று  மாவட்டச் செயலாளர்கள் பலர் வலியுறுத்தியதால் இளைஞரணி செயலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.  கட்சியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட உதயநிதிக்கு அதிர்ஷடம் கதவை தட்டியதாகவும், அவருக்கு இந்த பதவியிலிருக்க தகுதி இல்லை என்றும் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

udhay

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இளைஞரணி செயலளாராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என்ற போஸ்டர் வைரலாகி வருகிறது. அதற்கு மேலே களவாணி 2 என்ற படத்தின் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் போஸ்டர் ஒட்டும் பையனுக்கு இவ்வளவு அறிவா... சரியாக ஒரு உண்மையை சொல்லியிருக்கிறார் எனக் கூறி விமர்சனங்களை பதிவிட்டுவருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.