• April
    25
    Thursday

Main Area

Main



காதலருக்கு உடல்நிலை பாதிப்பு: ஓடும் பேருந்தில் விஷம் குடித்த பெண் போலீஸ்!

police
police
Loading...

ராமநாதபுரம் : காதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவருத்தம் அடைந்த பெண் போலீஸ், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம்  செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் செண்பகம். கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருச்சி திருவெறும்பூரில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரிந்து வந்த ஜெயதேவன் என்பவருக்கும் செண்பகமும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அடுத்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற இருந்ததாகக்  கூறப்படுகிறது. 

இந்நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் ஜெயதேவன் அனுமதிக்கப்பட்டார். இதனால் மனவருத்தம் அடைந்த செண்பகம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்து, கோவில் பகுதியில் மயங்கி கிடந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதைக் கவனித்து, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில் பஸ்சில் வரும் வழியில் புதுக்கோட்டை பகுதியில் வைத்து செண்பகம் விஷம் குடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.