• October
    17
    Thursday

Main Area

Main



ம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் - பாவம் அந்த ஐபிஎஸ் ஆஃபிசர்!

Sanjiv Bhatt
Sanjiv Bhatt

கடந்த 1989ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் ஒன்றில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் விடுதலைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, இதில் தொடர்புடைய அதிகாரி ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 30 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதில் வேறென்ன விசேஷம்? 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மத கலவரத்தில் 1000 பேர் கொல்லப்பட்டதில் மோடிக்கும் பங்குண்டு என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியதால் பதவி நீக்கப்பட்ட‌ ஐ.பி.எஸ். ஆஃபிசர் சஞ்சீவ் பட்தான் இப்போது தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அந்த அதிகாரி.

Justice Loya

வழக்கமாக, மோடி - அமித் ஷா கூட்டணியை எதிர்க்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள், பத்ரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அச்சே தின் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும். அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ கோர்ட் நீதிபதி ஹரிகிஷன் லோயா, ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது அகால மரணம் அடைந்தது ஒரு சின்ன உதாரணம். அந்தவகையில், மோடி அமித் ஷா கூட்டணிக்கு எதிராக பகிரங்கமாக குற்றம் சுமத்திய சஞ்சீவ் பட்டிற்கு சிறை தண்டனையோடு நிறுத்தப்பட்டதில் அவருடைய குடும்பத்தினர் சந்தோஷம்தான் படவேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.