• April
    25
    Thursday

Main Area

Main



'மீண்டும் மோடி' டி சர்ட் அணிந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

namo again
namo again
Loading...

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் பாஜகவினரால் கிளப்பி விடப்பட்ட மோடி அலை இப்போது 5 வருட ஆட்சியின் முடிவில் மோடி எதிர்ப்பலையாக மாறி வருகிறது. மற்ற மாநிலங்களைகளை விட தென் மாநிலங்களில் மோடிக்கு இருந்த சிறிதளவு செல்வாக்கும் மொத்தமாக சரிந்து இருக்கிறது என்றே கூற வேண்டும்.

modi

இந்நிலையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரப் பேரணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே கல்லூரி மாணவி ஒருவர் நமோ அகெய்ன் எனும் டிசர்ட் அணிந்து சென்றார். அப்போது அப்பெண் மீது காங்கிரஸ் கட்சியினர் எனக் கூறி சிலர் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பிரபலமானது இந்த டி சர்ட்.  மீண்டும் மோடி என்று பொருள் படும் "நமோ அகைன்' என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 

namo again

தாம் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் அல்ல என்றும் மோடியின் ஆதரவாளர் தான் என்றும் அப்பெண் பதிலளித்த போதும் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணைக் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பாஜகவினர் மோடி வாழ்க என்று கோஷமிட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.