• July
    20
    Saturday

Main Area

Main



அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
Loading...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த  இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

கடந்த ஆறு மாதங்களாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் இன்று சில இடங்களில் பெய்த மழை வெயிலை சற்று தணித்தது.இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதே நிலை நீடித்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் குறையும் என முனுமுனுக்கின்றனர் சென்னை வாசிகள். 

rain

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார். இதேபோன்று  வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த  இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.