• May
    21
    Tuesday

Main Area

Mainகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க!

ஸ்ரீ நாராயணா காஃபி ஹவுஸ்
ஸ்ரீ நாராயணா காஃபி ஹவுஸ்
Loading...

ஸ்ரீ நாரயணா காஃபி ஹவுஸ்.இந்த பெயரை பார்த்ததும் பொட்டுவைத்துக் கொண்டு பொங்கல் சாப்பிடுவோர் உணவகம் என்று நினைத்திருந்தால்,வெரி ஸாரி;இது பியூர் நான் வெஜ் ஏரியா.கோழி தெறக்கல்,உப்புக்கறி,கோழி மிளகுக்கறி,பூப்போல வெந்த மட்டன் சுக்கா,பூண்டு குழம்பு,கருணை கிழங்கு மசியல்,நண்டு குருமா,மாங்காய் பச்சடி,வெண்டைக்காய் மண்டி என்று காரசாரமாக செட்டிநாடு விருந்தளிக்கும் உணவகம் இது.

food

சிவகங்கைக்கு அருகில் உள்ள கானாடுகாத்தான் ராஜா சர் தெருவில் இருக்கிறது.முதலில் சுரீர் காரத்துடன் நாட்டுக்கோழி சூப்புடன் விருந்தை துவக்குகிறார்கள்.அடுத்து ஒரு சப்பாத்தியும்,அதற்கு தொடுகறியாக கருணைக்கிழங்கு மசியலும் தருகிறார்கள். கூடவே சின்னவெங்காயம் சேர்த்த ஒரு ஆம்லெட்டும் வருகிறது. 

அப்புறம் காரமும் மனமும் நிறைந்த மிளகுக்கோழி குழம்பு வருகிறது, ஐந்தாறு கோழித்துண்டுகளோடு.அடுத்து இரு சின்ன கிண்ணங்கள் வருகின்றன.ஒன்றில் புலவ்,மற்றதில் எலுமிச்சை சாதம்.ஆயிற்றா,இதற்குப்பிறகுதான் சோற்றை கண்ணில் காட்டுகிறார்கள்.

cook

சூடான பொன்னி அரிசி சோறு வைத்து கூடவே,வாளை பூ கோலா உருண்டை, இனிப்பும்  புளிப்பும் கூடவே காரமும் சரிவிகிதமாக கலந்த மாங்காய் பச்சடி,வெங்காயப்பச்சடி,அப்பளம்,மோர்மிளகாய் வைக்கிறார்கள்.

கெட்டியான சிக்கன் குழம்பு,கத்தரிக்காய் புளிக்குழம்பு,பச்சைப்புளி ரசம்,மோர் தருகிறார்கள்.கோழித்தெரக்கல்,மீன்,மட்டன் சுக்கா ,என்ன வெங்காயமும் குண்டு மிளகாயும் போட்டு செய்த உப்புக்கறி போன்றவை தனியாக வாங்கிக் கொள்ள வேண்டியவை.

co

கானாடுகாத்தான் அரண்மனை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது முதல் வெளிநாட்டு பயணிகளுக்கும் பஞ்சமில்லை.ஸ்ரீ நாராயணா காஃபி ஹவுஸ் துவங்கி பத்துவருடமாகிறது.ஒரு பாரம்பரிய செட்டிநாடு வீட்டை உணவகமாக மாற்றி இருக்கிறார்கள்.

che

கோட்டைகதவுகள் போன்ற பிரம்மாண்ட கதவுகளும்,ஆத்தங்குடி டைல்ஸ் பதித்த விசாலமான ஹாலும் (ஒரே சமையத்தில் ஐம்பது பேர் சாப்பிடலாம்)அவர்கள் போடும் பில் சர்தான் என்று நம்மை சமாதானப்படித்தி விடுகின்றன.இது தவிர ,காலையும் மாலையும் இட்லி,தோசையுடன், வெள்ளையப்பம்,கந்தரப்பம்,தவளைவடை,பூரணக் கொழுக்கட்டை போன்ற செட்டிநாடு ஸ்பெஷாலிட்டிகளும் உண்டு.
செட்டிநாடு உணவுகள் என்றாலே,காரமும் வாசனையும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்.ஆனால் வயிற்றைக் கெடுக்காது.தைரியமாக புகுந்து விளையாடுங்கள்.

இதையும் படிங்க: ரத்தம்...குடல்...நுரைஈரல்... அட்டகாசமான ‘த்ரி இன் ஒன்’ அசைவ பொரியல்!

2018 TopTamilNews. All rights reserved.