• July
    20
    Saturday

Main Area

Main



கணவன்மார்கள் ரிலாக்ஸ் பண்ணுங்க...

 அரசன்,மகாராணி
அரசன்,மகாராணி
Loading...

நெடுங்காலத்திற்கு முன்பு ஓர் அரசன் மகாராணியுடன் அரசவையில் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்பொழுது ஒரு மீனவன் அரசவைக்கு வந்து  ஒரு மீனைப் பரிசாக அளித்து, ‘மன்னா! இந்த அரிய வகை மீனை தாங்கள் ஏற்றுக்கொள்வது தான் சிறப்பு’ என்று மன்னரிடம் கொடுத்தான். மனம் மகிழ்ந்த மன்னன் அந்த மீனவனுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுத்தான்.
அரசருக்கு நன்றி கூறி பொற்காசுகளை மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு மீனவன்  விடைபெற்றான்.

raja and fishermen

இவை அனைத்தையும் அருகிலிருந்து கவனித்து கொண்டிருந்த மகாராணி கொதித்து விட்டார். ஒரே ஒரு மீனுக்கு இத்தனை பொற்காசுகளா? மீனவனிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று மன்னனை வற்புறுத்தினாள் மகாராணி. பொற்காசுகளை திரும்ப பெறுவது முறையல்ல என்று மன்னன் மகாராணிக்கு அறிவுறுத்தினான் .
இருந்தாலும் மகாராணிக்கு கோபம் குறையவில்லை. மீனவனை திரும்ப அழைத்து ஆண் மீனா, பெண் மீனா என்று கேளுங்கள். ஆண் மீன் என்றால் பெண் மீன் தான் வேண்டுமென்றும், பெண்மீன் என்றால் ஆண்மீன் தான் வேண்டுமென்றும் கேட்கச் சொன்னாள் மகாராணி.
வேறு வழியின்றி திரும்ப அழைக்கப்பட்டான் மீனவன். இப்போது கேள்விகளை மகாராணியே கேட்க ஆரம்பித்தாள். மன்னனை பேசவிடவில்லை.புத்திசாலி மீனவன் மகாராணி இது ஆணின் குணங்களையும், பெண்ணின் தன்மைகளையும் கொண்ட அதிசய மீன் அதனாலேயே அரசருக்கு கொண்டு வந்தேன் என்று கூறினான். இந்த சாமர்த்தியமான பதிலில் மகிழ்ந்த அரசர் மேலும் ஐயாயிரம் பொற்காசுகள் கொடுக்க உத்தரவிட்டார். பெற்றுக் கொள்ளும் போது ஒரு பொற்காசை தவறவிட்டான் மீனவன். கர்மசிரத்தையுடன் அதை தேடி எடுத்து பணமுடிப்பில் சேர்த்ததைக் கண்ட மகாராணி, பேராசைக்காரா அதை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து விட்டு போகட்டுமே என்றாள்.

coins

மீனவன் சற்றும் சலிப்பின்றி , அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக அதை யாராவது மிதித்து விட்டால் அதை என்னால் தாங்கி கொள்ள இயலாது என்பதாலேயே தேடி எடுத்தேன். பொருளுக்காக அல்ல மகாராணி என்று நிதானமாக கூறினான்.
மீனவனின் சாதுர்யமான பேச்சில் கவரப்பட்ட மன்னன் மேலும் ஐயாயிரம் பொற்காசுகள் தர உத்தரவிட்டான். இந்த முறை மகாராணி  வாயைத் திறக்கவே இல்லை. 
அரசவையில் இருந்த நிதியமைச்சர் பெண்கள் வாயை மூடிக் கொண்டிருந்தாலே அரசாங்க கஜானா காப்பாற்றப்படும் என முணுமுணுத்தார்.

2018 TopTamilNews. All rights reserved.