• June
    19
    Wednesday

Main Area

Main



விஷாலின் 'அயோக்கியா'வைத் தொடர்ந்து...தனுஷ்,விஜய் சேதுபதி படங்களுக்கும் சிக்கல் !?

விஜய் சேதுபதி- தனுஷ்
விஜய் சேதுபதி- தனுஷ்
Loading...

சென்னை: விஜய் சேதுபதியின் சிந்துபாத்,தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகா்கள் விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களைத் தமிழில் வெளியிட கே புரொடக்ஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாகுபலி திரைப்படத்தைத் தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். 

அப்போது 17.60 கோடி ரூபாய் பணத்தை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தது. 

இந்த வழக்கில் தங்களுக்கு வரவேண்டிய தொகையை திருப்பித் தராமல், கே புரொடக்ஷன்ஸ் எந்த ஒரு  படத்தையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க கோாியது. மேலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் உட்பட அனைத்து உரிமங்களையும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.