• June
    25
    Tuesday

Main Area

Main



அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது - பாக்., பிரதமர் குற்றச்சாட்டு

imrankhan
imrankhan
Loading...

இஸ்லாமாபாத்: அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துகளால் இருநாட்டு உறவவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டின் புதிய பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றார். இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும், தீவிரவாத தாக்குதல், அத்துமீறல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு சக்தி நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் குறித்தோ அல்லது மறைமுக போர் குறித்தோ சிந்தித்து பார்க்கக் கூடாது. இது இரு நாடுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும். இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். ஆனால் எனது முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.