• February
    19
    Tuesday

Main Area

Main

ஹனிமூன் சுவாரஸ்யங்கள்!!

honeymoon
honeymoon
Loading...

சென்னை: புதுமண தம்பதிகள் செல்லும் ஹனிமூனுக்கு அந்த பெயர் வருவதற்கான காரணமாக இருந்த பல்வேறு நிகழ்வுகள் சுவாரசியமானவை.

உலகில் உள்ள அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிகழ்வு என்பது தனக்கு நடக்கும் திருமணமும் அதன் பின்னான தன்னுடைய வாழ்வையும்தான். அப்படி திருமணம் முடித்த புதுமண தம்பதிகள் தங்களை புரிந்து கொள்வதற்கும், தங்களின் எதிர்கால வாழ்வு எப்படி இருக்க போகிறது என்பதை உணர்ந்து, தெரிந்து கொள்வதற்காகவும் தம்பதிகள் இருவர் மட்டும் செல்லும் சுற்றுலா ஹனிமூன் அல்லது தேனிலவு. இந்த சுற்றுலாவிற்கு ஹனிமூன் என பெயர் வந்ததற்கான காரணங்கள் சுவாரசியமானவை.

இந்த சுற்றுலாவிற்கு  ஆரம்ப காலங்களில் ஹனிமூன் என்ற பெயர் கிடையாது. ஹனிமன்த் என்றுதான் அழைத்து வந்திருக்கிறார்கள். அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் புதுமண தம்பதிகளுக்கு கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

திருமணமான புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிவிடுவார்களாம். அதன் பிறகு அந்த தம்பதிகள் தங்களது முதலிரவை கொண்டாடுவார்கள் .

திருமணமான வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள்.

பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ள மரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.

இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உலகில் உள்ள பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இப்படியாக தேனுக்கும் திருமணம் ஆன தம்பதிகளுக்கும் தொன்றுதொட்டு தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இதனால்தான் புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.