• July
    21
    Sunday

Main Area

Main



அமெரிக்க இராணுவத்தை தீவிரதவாத அமைப்பாக அறிவிக்க முடிவு; ஈரான் அதிரடி?!...

அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவம்
Loading...

உலகத்தில் தீவிரவாதம் ஒழிய ஈரான் மிக முக்கியமான ஒரு சட்டத்தை இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களின் அரசியலமைப்பு அவையில் நிறைவேற்றவுள்ளது. அதன்படி ’அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத அமைப்பு’ என்று தடை செய்யப்போகிறது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பெருமளவு தீவிரவாதம் குறைக்கப்படும். மேலும் இதே நடைமுறையை மற்ற உலகநாடுகள் அனைவரும் கடைபிடித்தால் பூமியிலிருந்தே தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் ஆகவெ உலக நாடுகள் இதனை உடனே செய்யவேண்டுமென்று ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

a

ஈரானிய எண்ணெய்யை பெறுவதில் டெஹ்ரானுக்கு அமெரிக்கா தந்த அழுத்தம் இதற்கு ஒரு முக்கிய காரணம். அதேபோல் ஈரானின் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை தீவிரவாதிகள் என குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க அரசாங்கம், ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாவலர் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என அறிவிக்க முக்கிய காரணமாக விளங்கியது மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் என்பதால் அவர்கள் மீது தீவிரவாதிகள் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

legend

அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட 60-க்கும் அதிகமான அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்கள் என அறிவித்துள்ளது அமெரிக்க அரசாங்கம்.

தீவிரவாத இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் அமெரிக்க அரசாங்கத்துக்கும், அதற்கு உறுதுணையாய் இருக்கும் இராணுவத்துக்கும் முக்கிய பங்களிப்பு உள்ளது. அதனால்தான் ஈரான் அரசாங்கம் ‘அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத அமைப்பு' என சட்டம் இயற்றி அறிவிக்கவுள்ளது. ஈரானின் இந்த முடிவுக்கு பல தரப்பிலும் வரவேற்பு உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.