• October
    20
    Sunday

Main Area

Main



தோனி மீது முழு பாரத்தையும் சுமத்துவது சரியல்ல; சச்சின் கவலை !!

தோனி,சச்சின் டெண்டுல்கர்
தோனி,சச்சின் டெண்டுல்கர்

தோனி என்ற தனி மனிதனை மட்டுமே நம்பி இருப்பது சரியானது அல்ல என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார். 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நூழிலையில் வெற்றியை தவறவிட்டு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 

sachin

இந்திய அணியின் தோல்விக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தோனியை மட்டுமே எப்பொழுதும் நம்பி இருப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். 

virat and rohit

இது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், தோல்விக்கு எந்த ஒரு தனி மனிதரையும் குற்றம் சொல்ல முடியாது, அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் பொறுப்பு உள்ளது. விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான துவக்கம் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறுவதும் சரியானது அல்ல. அதே போல் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்டனர்,

dhoni and jadeja

ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன் பார்டனர்ஷிப் என்பது சிறப்பானது. ஆனால் எப்பொழுதும் தோனி வருவார் எத்தனை ரன்கள் இருந்தாலும் அவர் வந்து அடித்து கொடுப்பார் என்று அவரை மட்டுமே நம்பி இருப்பது சரியானது அல்ல” என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.