• October
    17
    Thursday

Main Area

Main



போலீஸ், ரவுடிகளால் தேடப்படும் கார்த்தி! அனல் பறக்கும் டீசர் இதோ

கார்த்தி
கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான தேவ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கைதி படத்தில் நடித்துள்ளார். தமிழின் முதல் Prison Break படமாக இந்த படம் உருவாகியுள்ளது. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

karthi


இதில் அஞ்சாதே நரேன், யோகிபாபு, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் சிறையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கார்த்தியைப் பிடிக்க போலீஸ், ரவுடிகள் எனக் கூட்டமே காத்திருக்கிறது. கார்த்தி லாரி ஓட்டியபடி வந்து அனைவரையும் அவரவர் இடத்திலேயே சென்று சந்திப்பது போல் உள்ளது. 


இதில் அவர்களை கார்த்தியை கொல்ல ஏன் காத்திருக்க வேண்டும், கார்த்தியின் பின்னணி என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகள் நாம் மனதில் உருவாகி படத்தின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் டீஸர் அமைந்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.