• May
    21
    Tuesday

Main Area

Main



குட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்

குட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்
குட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்
Loading...

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க நடிகர் விஜய் இன்று வந்திருந்தார். அவர் வழக்கமாக பயன்படுத்தும் காரை தகர்த்து சிறிய வகை காரில் வருகை தந்தார்.

சுமார் 10 நிமிடங்கள் அவர் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ் அரசு ஆகியோரிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். கருணாநிதி நலமாக வீடு திரும்புவார் என்று விஜய் அப்பொழுது ஸ்டாலினிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மருத்துவமனை வெளியே பத்திரிகையாளர்கள் விஜயின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதன் பிறகுதான் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக விஜய் தனது வீட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. பத்திரிகையாளர்களின் பேட்டியை தவிர்ப்பதற்காக மற்றும் தனது ரசிகர் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பின் வாசல் வழியாக வெளியே சென்றுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நள்ளிரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்தார். அப்போதும் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு அவர் முகத்தை மூடியபடி கிளம்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.