• October
    17
    Thursday

Main Area

Main



சுய இன்பம் எப்படி செய்வது என்பதை கூகுள் பார்த்துக் கத்து கொண்டேன்:  பிரபல நடிகை ஓபன் டாக்!

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை: லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கூகுளைப் பார்த்து கற்றுக் கொண்டதாக நடிகை கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர் அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கிலும், காஞ்சனா இந்தி ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடத்துத்திருந்தார். அது வெளியான சமயத்தில்  ஒரு பெண் எப்படி இதுபோன்று நடிக்கலாம்? என்று பெரும் பரப்பானது. இந்தப் படத்தைக் கரண் ஜோஹர், ழோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி என்று 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.

kirara

இந்த நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் படம் வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் கியாரா நேற்று பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, 'இதை பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அந்தக் காட்சியில் எப்படி நடிப்பது என்று மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடி பார்த்தேன். அது தொடர்பான காட்சிகளைப் பார்த்துத் தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு நன்கு சொல்லிக் கொடுத்தார்.அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக செயல்பட்டார்' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.