• July
    18
    Thursday

Main Area

Main



மக்களவை தேர்தல்; விருதுநகர் தொகுதியில் குஷ்பு போட்டி!?

குஷ்பு (கோப்புப்படம்)
குஷ்பு (கோப்புப்படம்)
Loading...

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக-பாமக-பாஜக கட்சிகளும், திமுக-காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகும்.

இந்த தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், வருகிற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவை களமிறக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, விருதுநகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து குஷ்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.