• June
    27
    Thursday

Main Area

Main



கிரேஸி மோகன் எப்படி இறந்தார்?பின்னணி குறித்து வீடியோ வெளியிட்ட மாது பாலாஜி

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்
Loading...

சென்னை: கிரேஸி மோகன் மரணம் குறித்து அவரது சகோதரர் மாது பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

முன்னணி நாடகக் கலைஞர், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என்று  பன்முகம் கொண்டவர் கிரேஸி மோகன். இவர் திடீரென்று  திங்கள்கிழமை அன்று காலமானார். அதையடுத்து நேற்று கிரேஸி மோகனின் உடல் மயிலாப்பூரிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. 

இந்த நிலையில் கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'என்னுடைய சகோதரர் கிரேஸி மோகன் ஜூன் 10-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு காலமானார். நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் எங்களுக்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வீடியோவை வெளியிடுவதற்குக் காரணம் என்னவென்றால், முதலில் நாங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். ஏனெனில் அவர் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ மரணமடையவில்லை. இந்த மரணம் உடனடியாக நிகழ்ந்த ஒன்று. இதனால் எங்களுக்கே பேரதிர்ச்சி.
அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மோகனைச் நேரில் சந்தித்தேன். எப்போதும் போல மிகவும் சந்தோஷமாகப் பேசினார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எதுவும் கிடையாது. எல்லோரும் தவறான தகவல்களை எழுதுகிறார்கள். 3 மாதங்களுக்கு முன்பு கூட உடல் பரிசோதனை செய்தோம். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எதுவும் கிடையாது. 

அவர் வழக்கமாக காலை 9.15 மணிக்கு காலை உணவை எடுத்துக்கொள்வார். அன்றும் அதேநேரத்தில் உணவு உட்கொண்டுள்ளார். பின்னர் 9.45 மணிக்கு என்னை அழைத்தார். பாலாஜி மூச்சு முட்டுவது போல உள்ளது. அடிவயிற்றில் லேசாக வலி இருக்கிறது. கொஞ்சம் வரமுடியுமா என்று கேட்டார். உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். 

md

அந்த மருத்துவமனையின் சுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு நன்கு சிகிச்சை அளித்து அவரை மீட்டுக் கொண்டுவர முயன்றார்கள். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவர்கள் போராடினார்கள். ஆனால் என்ன செய்வது. மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. விதி அதுபோல முடிவெடுத்துவிட்டது. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர் வியாதி வந்து இறந்துவிட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது. அவரைச் சரியாக கவனிக்கவில்லை என்று இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.