• October
    18
    Friday

Main Area

Mainநியூசிலாந்து தாக்குதல்: நீதிமன்றத்தில் சிரித்து கொண்டே இருந்த குற்றவாளி; தீவிரவாதியாக மாறியது எப்படி?

குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட்
குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட்

நியூசிலாந்து: நியூசிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி மீது கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குறித்து வெளியான தகவல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்து துப்பாக்கி சூடு:
newzealand ttn

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமானோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவன் துப்பாக்கியால் தொழுகையில் ஈடுபட்டவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டான். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினான். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் இந்த  பிரண்ட்டன் டர்ரண்ட்
mosque attack ttn

இந்த கொடூர தாக்குதலில் ஈடுப்பட்ட குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட். ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாநிலத்தின் சிறு நகரான கிரஃப்டனைச் சேர்ந்த இந்த 28 வயது இளைஞனை இத்தனை கொடூரமான கொலைகாரனாக்கியது எது, அல்லது யார்?.அனேகமாக லைவ் ரிலே செய்யப்பட்ட உலகின் முதல் தீவிரவாத தாக்குதல் இதுதான்.

அவனது துப்பாக்கியில்  கிட்டத்தட்ட ஆயிரமாண்டு கால கிறிஸ்துவ முஸ்லீம் பகையில் செத்தவர்கள், யுத்தம் செய்தவர்கள் பெயர்களை எழுதி வைத்திருக்கிறான்.நான் ஒரு சாதாரண வெள்ளை இன மனிதன்.கடைசி வெள்ளையின மனிதன்  உயிரோடு இருக்கும் வரை அவர்கள் நமது நிலத்தை ஆக்கிரமிக்க விடமாட்டோம் என்று முழங்குகிறான்.ஆனால் அவனது குடும்பமோ,ஊரோ இன்னும் இந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்:
ttn

பிரண்டனின்  குடும்பமே போலீசை அழைத்து விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவோம் என்று சொல்லி இருக்கிறது. சிறு சிறு ட்ராபிக் விதி மீறல்களைத்தாண்டி எந்த குற்றச்செயலிலும் இதுவரை அவன் ஈடுபட்டதே இல்லை என்ற உள்ளூர் போலீஸின் தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  

தீவிரவாதியாக மாறியது எப்படி?
attack ttn


தீவிரவாதம் என்ற சொல்லுக்கு எதிர்மறையாக இருந்த இவன் எப்படி என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளார்கள் அப்பகுதி வாசிகள். உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவனாகவும்,ஜிம்முக்கு வரும் சிறாருக்கு உதவும் தன்னார்வலனாகவும் இருந்திருக்கிறான் பிரண்ட்டன்.

கடந்த 2010 ல் தந்தை புற்று நோயால்  இறந்து போக மன உளைச்சல் காரணமாக வீட்டை விட்டு கிளம்பிய பிரண்ட்டன் ஏழு வருடகாலம் உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறான்.இந்தப் பயணத்தின் போது தான் அவன்  தீவிரவாதப் பாதையில் திசை திருப்புவதற்கு ஏதுவாக நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நம் மண்ணைக் கைப்பற்ற முடியாது:
ttn

பிரண்டனின் டிவிட்டர் அக்கவுண்டில் 2016-ல் பிரான்சின் நீஸ்நகரில் பாஸ்டில்லா தினத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலைச் சித்தரிக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறான். ‘நமது நிலம் ஒரு நாளும் அவர்களுடையதாக இருந்ததில்லை, இனி அவர்களுடையதாக ஆகப்போவதுமில்லை.இந்த தாய்மண் நம்முடையது.கடைசி வெள்ளை மனிதன் உயிருடன் இருக்கும் வரை இந்த வந்தேறிகளால் நம் மண்ணைக் கைப்பற்ற முடியாது என்று காட்ட விரும்பினேன்' என்கிறான் கைதான குற்றவாளி பிரண்ட்டன் ட்ரண்ட்!

நீதிமன்றத்தில் சிரித்து கொண்டே இருந்த பிரண்ட்டன்
mosque attack ttn

இப்படி ஒரு தாக்குதலுக்கு கடந்த இரண்டாண்டு காலமாகவே தான் திட்டமிட்டு வந்ததாக சொல்லி இருப்பதோடு, ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்றத்தில் சிரித்து கொண்டே இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்து அதிகம் வன்முறையை சந்திக்காத நாடு, கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு வன்முறைச் சம்பவம்  அந்த நாட்டில் நடந்ததில்லை. அப்படிப்பட்ட கோர சம்பவத்தின் பிடியிலிருந்து அந்நாட்டு மக்கள் வெளிவரும் வரவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.