• July
    17
    Wednesday

Main Area

Main



கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு
கறிவேப்பிலை தொக்கு
Loading...

சாப்பாட்டில் கறிவேப்பிலை இருந்தால், அதை தேடிப் பிடித்து தட்டில் ஓரமாக வைக்கிற பழக்கம் தான் பெரியவர்களிடையே இருக்கிறது. நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளும் கறிவேப்பிலையை, வேப்பிலையை ஒதுக்குவது போல ஒதுக்கி வைக்கிறோம். உண்மையில் கறிவேப்பிலையில் அபரிமிதமான சத்துக்கள் இருக்கின்றன. பின் அந்த சத்துக்கள் எல்லாம் நம் உடலில் சேர்வது எப்படி?

neem leaves

கறிவேப்பிலையை தொக்காகச் செய்து, உணவில் பயன்படுத்தலாம். கருகரு கூந்தல் தரும் மிகச் சிறந்த இலை, கறிவேப்பிலை. கறிவேப்பிலை தொக்கு செய்து, ஒரு வாரம், பத்து நாட்கள் வரையில் ஒரு பாட்டிலில் வைத்துப் பயன்படுத்தினால் கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் வைக்காமலேயே பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 3கப்
உளுத்தம்பருப்பு - 1/4கப்
புளி - தேவைக்கு
வெல்லம் - 1துண்டு
சீரகம் - 1ஸ்பூன்
எண்ணெய் - 1/4கப்
காய்ந்த மிளகாய் - 20
கடுகு,பெருங்காயம் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

neem leaves

செய்முறை
புளியை கால் கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை அதே எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும். இப்போது, ஊற வைத்த புளியில் கரைசல் எடுத்து, வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி, சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால் கறிவேப்பிலை தொக்கு ரெடி.

neem leaves

இட்லி, தோசை போன்றவைகளுக்கு சட்னி, சாம்பாருக்கு பதில் சத்தான சைட் டிஷ்ஷாக இருக்கும். சாதத்திலும் அப்படியே போட்டு பிசைந்து சாப்பிடலாம். சாப்பாட்டில் நல்லெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் ருசியும் கூடுதலாக இருக்கும். வாசமும், சத்தும் எக்ஸ்ட்ரா போனஸ்.

2018 TopTamilNews. All rights reserved.