• June
    20
    Thursday

Main Area

Main



"எங்கப்பா, தாத்தா எல்லாம் யாரு தெரியுமா"? ஹோட்டல் ஊழியர்களிடம் எகிறிய முதல்வர் வீட்டு கன்னுகுட்டி

Nikhil Gowda
Nikhil Gowda
Loading...

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் ஆளும் மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி சார்பில் வேட்பாளராக களமிறங்கி, சுயேட்சையாக நின்ற சுமலதாவிடம் தோற்றுப்போன‌ வேட்பாளரை பற்றிய செய்தி இது. இத்தனைக்கும் சுமலதா வெளிநபரல்ல. மாண்டியாவின் காங்கிரஸ் எம்.பியாக இருந்து இறந்துபோன நடிகர் அம்பரீஷின் மனைவி. கணவருக்குப் பிறகு அத்தொகுதியில் நிற்க சுமலதா இடம் கேட்க, தொகுதியை கூட்டணிக்கு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கைவிரித்துவிட்டது.

Nikhil Gowda

காங்கிரஸ் கூட்டணி சார்பாக நின்றது முதல்வர் குமாரசாமியின் முதல் மனைவியின் முதல் மகன் நிகில் கவுடா. நிகில் மட்டுமல்ல, நிகிலின் தாத்தா முன்னாள் பிரதமர் தேவே கவுடா தும்கூர் தொகுதியில் போட்டியிட்டார். தேவே கவுடாவின் இன்னொரு மகனான மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால், ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

Sumalatha Ambareesh

குடும்பத்திலிருந்து வேட்பாளராக களம் இறங்கும் ஒருவருக்கு, குடும்பமே ஓட்டு கேட்டு போவது வழக்கம்தானே. ஆனால் கர்நாடகாவில் ஒரு குடும்பமே வேட்பாளராக நின்றது. தாத்தா தும்கூரில் வேட்பாளர், மகன் முதலமைச்சர், இன்னொரு மகன் பொதுப்பணித்துறை அமைச்சர், பேரன் மாண்டியா தொகுதி வேட்பாளர், இன்னொரு பேரன் ஹாசன் தொகுதி வேட்பாளர் என மொத்த குடும்பமும் வேட்பாளராக களம் இறங்கும்வேளையில், முதல்வர் குமாரசாமியின் இன்னொரு மனைவியும் நடிகையுமான ராதிகா, தன் மகளுக்கும் சீட் வேண்டுமென அடம்பிடித்திருக்கிறார். ராதிகாவின் மகளுக்கு இன்னும் 15 வயதுகூட ஆகவில்லை, தேர்தல் கமிஷன் ஒத்துகொள்ளாது என உண்மை நிலையை விளக்கிவிட்டு பிரசாரத்திற்கு சென்றிருக்கிறார் குமாரசாமி.

HD Kumarasamy

சரி விஷயத்திற்கு வருவோம். மாண்டியா தொகுதியில நிகில் களமிறங்கி தோற்றுப்போனாரா? தோற்றது பெரிய வீட்டு கன்னுக்குட்டி. போயும்போயும் ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டாயே என நண்பர்கள் குழாம் உசுப்பேற்றிவிட, மைசூர் ஓட்டலுக்கு சென்று சோகத்தை தணிக்க முயற்சித்திருக்கிறார். தாகசாந்தி தீர்ந்தாலும் சோகசாந்தி தீராததால், ஓட்டலில் ரகளை செய்திருக்கிறார். "நான் யார் தெரியுமா,  எங்கப்பா யார் தெரியுமா? எங்க தாத்தா முன்னாள் பிரதமர் தெரியுமா என வரிசையாக அடுக்கிக்கொண்டேப் போன செய்தி, அடுத்த நாள் கன்னட நாளிதழில் செய்தியாக வெளியாகிவிட்டது.இப்போது ஓட்டல்காரர்களையும் பத்ரிகைகாரர்களையும் முதல்வர் குமாரசாமி சமாதானம் செய்துகொண்டிருக்கிறார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!

2018 TopTamilNews. All rights reserved.