• June
    19
    Wednesday

Main Area

Main



நீங்க சொல்றத கேட்க முடியாது; விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

வெலிங்டன்: பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் குறித்து கேட்க மறுத்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் நியூசிலாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் இருந்து ஆக்லாந்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு NZ424 ரக விமானம் புறப்பட்டுள்ளது. பொதுவாக விமானம் கிளம்பும் முன்னர், பயணிகளிடம் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விமானப் பணிப்பெண்கள் செய்முறை விளக்கம் தருவர். தவிர, அதுகுறித்த வீடியோ ஒளிபரப்பப்படுவதுடன், கையேடும் விமானத்தில் இருக்கும். குறிப்பாக, அவசரகால வெளியேற்றத்தின் அருகே உள்ள இருக்கயில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூடுதலாக அக்கதவை எப்படி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் விளக்கப்படும்.

flight attendant

அந்த வகையில், NZ424 ரக விமானம் புறப்பட்டவுடன், பாதுகாப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டதுடன், விமானப் பணிப்பெண்கள் செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். அப்போது, அவசரகால வெளியேற்றத்தின் அருகே அமர்ந்திருந்த பெண் அதனை கவனிக்காமல் தனது புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கியுள்ளார். பின்னர், தனது செல்போனை எடுத்து அதனை இயக்கியுள்ளார். அவருடன் வந்த நபரும் இதே போன்று செய்துள்ளார்.

எனினும், பணிப்பெண்கள் அவர்களிடம் வந்து மிகவும் பொறுமையாக, இந்த விளக்க முறைகளை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனெனில், நீங்கள் அவசர கால வெளியேற்றத்தின் அருகே அமர்ந்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், அதனை சட்டை செய்யாத அந்த பெண், தனது காதுகளை தனது கையால் மூடி, பணிப்பெண் கூறுவதை ஏற்க மறுத்துள்ளார்.

flight attendant

இதனால், விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. தொடர்ந்து, விமானம் புறப்பட்ட கேட்டின் அருகே மீண்டும் கொண்டு வரப்பட்டு, விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்தால், அந்த தம்பதியினர் இறக்கி விடப்பட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.