• July
    17
    Wednesday

Main Area

Main



அந்த ஹீரோ எனக்கு ஜோடியா என்று தயங்கினேன்: நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்!

பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர்
Loading...

சென்னை: மான்ஸ்டர் படத்தில் நடிக்க  தயங்கியதாக நடிகை பிரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  மான்ஸ்டர். இப்படத்தில் ஹீரோவாக நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். அவருக்காக ஜோடியாக நடிகை  பிரியா பவானி ஷங்கர் நாயகி நடித்துள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் மான்ஸ்டர். 

PRIYABHAVANISHANKAR

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில்  நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது விழாவில் பேசிய படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தின் ஹீரோ எஸ். ஜே. சூர்யா என்றதும் சிறிது தயங்கினேன்.

ஸ்க்ரீனில் பார்க்கும் போது அவருக்கும் எனக்கும் பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் எனக்குள் வந்தது. ஆனால் இயக்குநர் நெல்சனோ முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். உண்மையில் படபிடிப்பில் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டின் இசையில் என் படத்திற்கு பாடல் அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.