• May
    26
    Sunday

Main Area

Main



நியூசிலாந்து தாக்குதல் இந்த உலகத்துக்கான எச்சரிக்கை; பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Loading...

நியூசிலாந்து மசூதிகளுக்குள் புகுந்து தீவிரவாதி ஒருவன் 49 பேரை சுட்டுக்கொன்றது பற்றி காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நியூசிலாந்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமானோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரண்ட்டன் டர்ரண்ட் எனும் 28 வயது இளைஞன், தொழுகையில் ஈடுபட்டவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டான். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதில் 49 பேர் உயிரிழந்தனர், 48 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், நியூசிலாந்தில் நடந்துள்ள கொடூரமான தீவிரவாத தாக்குதல் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கான எச்சரிக்கை. வெறுப்புணர்வு என்றுமே கருணையற்றது, என் இதயம் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் நினைத்து வருந்துகிறது. அவர்களுக்கு அன்பையும் தைரியத்தையும் வழங்க வேண்டியது நம் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.