• July
    17
    Wednesday

Main Area

Main



சுறா புட்டு பாதி- கடமா பாதி கலந்து செய்த கலக்கல் சைட்டிஷ்...

சுறா புட்டு
சுறா புட்டு
Loading...

 

sura puttu

சுறாப்புட்டு அதிகாரம் 1

தேவையான பொருட்கள்

சுமார் 1 கிலோ எடையுள்ள சுறா மீன் 1
வெங்காயம். 2
பச்சை மிளகாய் 10
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 10 பல்
கறிவேப்பிலை ஒரு ஈர்க்
தேங்காய் துருவல்  4 ஸ்பூன்
கடுகு , உளுந்து,சீரகம் 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

சுறாமீனை சுத்தம் செய்து ,இட்லிக் குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடுங்கள்.
அப்புறம் அதை எடுத்து தோல்,மற்றும் எலும்பை மட்டும் நீக்கி சதைப்பகுதியை தனியாக ஒரு தட்டில் உதிர்த்து வையுங்கள்.

fish

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ,எண்ணெய்  ஊற்றி அது சூடானதும், கடுகு தாளித்து வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும்,உப்புசேர்த்து உதிர்த்து வைத்த சுறா மீன் சதைப் பற்றுகளை சேர்த்து ,தேவையான அளவு உப்புச்சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.இதற்கு பெயர் சுறா புட்டு.குழந்தைகளுக்கு பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு நல்லுணவு இது.ஆனால் நமது நோக்கம் வேறு.

sura puttu

அத்தியாயம் 2

கடமா என அழைக்கப்படும் மீனை வாங்கிவந்து அதன் மேலுள்ள அழுக்கை களைந்து அதை பளிச் வெள்ளை ஆக்குங்கள்.அது இப்போது ஒரு பை போல இருக்கும்.அதற்குள் சுறா புட்டை நிறப்பி,அதன் வாய்ப் பகுதியை ஒரு டூத் பிக்கால் தைத்து மறுபடியும் இட்லிக் குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து,இப்போது ஒரு வெள்ளை வாழைப்பழம் போலிருக்கும் கடமாவை வட்டத்துண்டுகளாக வெட்டி பரிமாறுங்கள்.

சுறா மீனை வேகவைத்து உதிர்த்தபோது எடுத்த தோல் மற்றும் எலும்பை ஒரு பாத்திரத்தில் போட்டு ,ஒரே ஒரு பச்சை மிளகாய்,ஒரே ஒரு தக்காளி சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து வடிகட்டி,கொஞ்சம் பெப்பரும் உப்பும் சேர்த்தால்,இலவச இணைப்பாக ஒரு சுவையான சூப்பும் கிடைக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.