• June
    20
    Thursday

Main Area

Main



சோறு மீந்து விட்டதா? வாங்க அதை புடிங் ஆக்குவோம்.

சோறு
சோறு
Loading...

ஆமாம்,பழைய சோற்றில் சுவையான புடிங்கை செய்து கொடுங்கள், குழந்தைகள் புடி..புடினு புடிக்கும்.இது,பழைய சோற்றில் செய்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்!

தேவையான பொருட்கள்

பழைய சோறு ஒரு கப்
100 மில்லி பால்
சர்க்கரை 4 ஸ்பூன்
ஏலக்காய் பொடித்தது 2
முட்டை 1
தேன் 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு 5
நெய் 2 ஸ்பூன்

white rice

ஒரு மீடியம் சைஸ் மிக்சி ஜாரில் பழைய சோற்றுடன் பாலையும் சர்க்கரையையும் போட்டு ,ஏலக்காய் பொடியை போட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாவைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வையுங்கள். ஓரத்தில் சிறு காற்றுக்கொப்பளங்கள் வரும்போது முட்டையை உடைத்து ஊற்றி கை எடுக்காமல் கிளறி அடுப்பை அனணயுங்கள்.

ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்புகளை வறுத்து வையுங்கள்.ஒரு கப்பில் நெய்யைத்தடவி,முந்திரி பருப்புகளை போடுங்கள். அதில் 2 ஸ்பூன் தேன் சேர்த்து அதன் மேல்,அரைத்து காய்ச்சி ,முட்டை சேர்த்து  கலக்கி வைத்திருக்கும் கலவையை ஊற்றி , ஒரு வாழை இலையால் மூடி ஃபிரீசரில் வைத்து,அரை மணி நேரம் கழித்து அதை எடுத்து கவிழ்த்தால் புடிங் ரெடி.இளம் மஞ்சள் நிறத்துடனும் கமகம வாசனையுடனும் இருக்கும்.ஒரு தடவை ட்ரை பண்ணிப்  பாருங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.