• March
    24
    Sunday

Main Area

Main



உதயசூரியன் சின்னத்தில் விசிக ரவிக்குமார்; திமுக தரப்பில் அழுத்தம் இல்லை - திருமாவளவன்

ரவிக்குமார் - திருமாவளவன்
ரவிக்குமார் - திருமாவளவன்
Loading...

மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள விசிக, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட உதயசூரியன் சின்னத்தை தேர்வு செய்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். திமுக தரப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி விசிகவுக்கு அழுத்தம் கொடுப்பதாய் கூறப்பட்டது. அதனை மறுத்து, உதயசூரியன் சின்னம் தேர்வு செய்தது பற்றி திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் எனும் நான் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளேன். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார். இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ராஜதந்திரமாக முடிவெடுத்தே விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க முடிவு செய்தோம். திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் இல்லை என தெரிவித்தார்.

திருமா இதற்கு முன்பே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றிபெற்றிருப்பதால், அவர் தனிச் சின்னத்தில் நிற்க விரும்புவதாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.