• April
    23
    Tuesday

Main Area

Main



மக்களவை தேர்தலுக்கு முன் விடுதலையாகிறார் சசிகலா?

sasi
sasi
Loading...

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, மக்களவை தேர்தலுக்கு முன் விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், அப்போது முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது நீதிபதி  குமாரசாமி நால்வரையும் விடுதலை செய்தார். அதன்பிறகு இந்த  தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தபோது 2017-இல் தீர்ப்பு வந்தது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள், ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் மற்ற மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அடைக்கப்பட்டனர். வருகிற 15-ஆம் தேதியோடு சசிகலா சிறைக்கு சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிறையில் இருக்கும்போது தவறுகள் ஏதும் செய்யாமல் சட்ட ஒழுங்கை மதித்து நடந்தால், நன்னடத்தை காரணமாக முன்பே விடுதலை செய்வது சட்டத்தில் உள்ளது. சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படியான சூழலில் அவர் நன்னடத்தை காரணமாக வெகு விரைவில் வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை மனதில் கொண்டு பாஜக சசிகலாவை பயன்படுத்தி தமிழகத்தில் கணிசமான இடங்களை பிடிக்கலாம் என திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்தாலும் அது கைகூடவில்லை. மத்திய அரசாங்கத்தின் நெருக்கடியை சில காலம் தொடர்ந்து சந்தித்ததால் அவர் பாஜவுடன் உடன்பட தயாராக இல்லை. எனவே சசிகலாவை விடுதலை செய்து காரியம் சாதித்து கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டிருக்கிறதாம், அதன்படி சசிகலா வெகு விரைவில் வெளியாவார் என தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.