• June
    27
    Thursday

Main Area

Main



காயம் காரணமாக விலகினார் ஷிகர் தவான்; இந்திய அணிக்கு பின்னடைவு !!

ஷிகர் தவான்
ஷிகர் தவான்
Loading...

 

dhawan

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது காயமடைந்த ஷிகர் தவான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அடுத்த மூன்று வாரங்கள் விலகுவதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் சதம் அடித்து அசத்திய ஷிகர் தவானுக்கு அதே போட்டியில் காயம் அடைந்தார். இதனால் பாதியில் வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். 
மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் ஷிகர் தவானுக்கு இன்று ஸ்கேன் செய்யப்பட்டது, இதில் ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் உறுதியாகியுள்ளது. 
 இதனையடுத்து ஷிகர் தவானுக்கு கைவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் அடுத்த மூன்று வாரங்கள் விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.