• July
    18
    Thursday

Main Area

Main



தல அஜித் வழியில் பிரியாணி பார்ட்டி கொடுத்த சூர்யா ! காப்பான் படப்பிடிப்பில் கொண்டாட்டம்!?

surya
surya
Loading...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தினேஷ் சுப்பராயன்தான் இந்தப் படத்திற்கு ஃபைட் கோரியோகிராபர்.

மோகன் லால், சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு முடிந்துவிட்ட நிலையில் சூர்யாவுக்கான காட்சிகள் இன்று தனியாக எடுக்கப்பட்டன. எம்.பிரபு கேமெரா மேன். எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்ததால், யூனிட் ஆட்களுக்கு சூர்யா தனது சொந்த செலவில் சிறப்பான பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.

kaappaan

இதற்கான நடித்த படங்களில் இப்படியெல்லாம் பிரியாணி  விருந்து கொடுக்கும் பழக்கம் சூர்யாவுக்கு கிடையாது. தல அஜித்தான், அவர் கையாலேயே பிரியாணி செய்து அசத்துவார். இப்போது சூர்யாவும் அந்த வழிக்கு வந்திருக்கிறார்.

லைக்கா புரெடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டாக்கி போர்சன் முடிந்து விட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் வெளிநாட்டில் எடுக்க விருக்கிறார்கள். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கள் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா, சமுத்திரகனி என பலர் நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடுவதாக திட்டமாம்.

2018 TopTamilNews. All rights reserved.