• October
    17
    Thursday

Main Area

Main



பரிசுத்தொகை ஒரு லட்சமப்பு ஒரு லட்சம்... மாஸ் காட்டும் டிக்டாக்...!

Tiktok
Tiktok

கூகுள் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட டிக்டாக் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதை கொண்டாடும் வகையில் டிக்டாக் பயனர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பொழுதுபோக்கிற்காகவும், இளைஞர்கள் மத்தியில் அனுதினம் நடக்கும் கேலி, கிண்டல்களையும் பதிவேற்றம் செய்யப் பயன்படுத்தும் டிக்டாக் ஆப் கலாச்சாரத்தை சீரப்பழிபதாகவும், இதனால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தது. இதனால் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் டிக்டாக்கின் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 4 கோடி வரை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்தது.இதனால் டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டிக் டாக் ஆப்பை பயன்படுத்த முடியாது என்றும் டிக் டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இதன் பின்னர் டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் செய்யப்பட்டு கூகுள் மற்றும் ஐஓஎஸ்  பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்தது. 

இந்நிலையில் இழந்த 4 கோடியை சம்பாதிப்பதற்காக பல அதிரடி ஆஃபர்களை டிக் டாக் நிறுவனம் அறிவித்தது.. அதன்படி, மே 1 முதல் 16ம் தேதி வரையில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஒரே நாளில் ப்ளே ஸ்டோரில் 90வது இடத்தில் இருந்த டிக் டாக் முதலிடத்துக்கு வந்துள்ளது. 

டிக்டாக் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததை கொண்டாடும் வகையில்  #ReturnOfTikTok என்ற ஹேஷ்டேக்கில் டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் வீடியோ செய்து வெளியிடும் 3 பேருக்கு தினந்தோறும் டிக்டாக் பரிசுகளை வழங்கிவருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.