• July
    18
    Thursday

Main Area

Main



பில்கேட்ஸ், பெசோஸ் வசிக்கும் பெஸ்ட் சிட்டி, பட் நோ மணி!

Gates - Bezos
Gates - Bezos
Loading...

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 119 பில்லியன் டாலர்களுடனும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் 107 பில்லியன் டாலர்களுடனும் உலகின் மிகப்பெரும் இரண்டு பணக்காரர்களாக இருப்பதும், அவர்கள் இருவருக்கும் வாஷிங்டன் மாகாணம் மெடினா எனும் நகர‌த்தில் வீடு இருப்பதும் புதிய செய்தியல்ல. ஆனால், உலகின் இரண்டு பெரிய பணக்காரர்களை தன்னகத்தே கொண்டுள்ள நகரமாக இருக்கும் மெடினா எவ்வளவு வளப்பமாக இருக்கவேண்டும். ஆனால் இல்லை. திவால் நிலையில் இருக்கிறதாம் மெடினா நகராட்சி.

Medina Town

நகராட்சியின் பணிபுரியும் காவல்துறையினர், தீயணைப்பு, மற்றும் பூங்கா பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திற்கே வழியில்லாமல் தவிக்கிறது மெடினா. நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், சொத்துவரியை உயர்த்தலாமா வேண்டாமா என பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்காக நகர் முழுவதும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது அந்நகராட்சி. இந்த நகரத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் மூவாயிரத்திற்குள்தான். பில் கேட்ஸும், ஜெஃப் பெசோஸும் மனதுவைத்தால், அமெரிக்காவுக்கே ஒரு வருடத்திற்கு சோறு போடலாம், மெடினா நகராட்சியின் பிரச்னை எல்லாம் ஒரு நாள் செலவு அவர்களுக்கு. அவ்வளவு வசதி இருக்கிறது. செய்வார்களா? இருவரும் செய்வார்களா?

2018 TopTamilNews. All rights reserved.