• July
    18
    Thursday

Main Area

Main



திரிணாமூல்- பாஜகவினர் இடையே மோதல்! 4 பேர் பலி!!

clash
clash
Loading...

கொல்கத்தாவில் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 22 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அம்மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மோதல் வெடித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூன்று பேரும், திரிணாமூல் கட்சியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். கட்சி சுவர் விளம்பர தாள்களை ஒட்ட முயன்ற போதும்,  கட்சிக்கொடிகளை அகற்றியபோதும், இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கைக்கலப்பில் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திரிணாமூல் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிணாமூல் கட்சித் தொண்டர் ஒருவரை, பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.