• July
    21
    Sunday

Main Area

Main



நிலத்தை இஸ்லாமியர்களுக்காக விட்டுக்கொடுத்த இந்துக்கள்!

கல்லறை
கல்லறை
Loading...

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் கல்லறைக்காக இந்து மக்கள் தங்கள் நிலத்தையே தானமாக கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் உத்தரபிரதேசம்தான். அங்கு அடிக்கடி இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள பெலாரிகான் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய கல்லறைக்கு அருகிலுள்ள இடத்தை சொந்தம் கொண்டாட இந்துக்கள் ஒரு பக்கமும், இஸ்லாமியர்கள் ஒரு பக்கமும் தொடர்ந்து போட்டிப்போட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த நிலத்தை தற்போது இஸ்லாமிய மக்களின் கல்லறைக்காக இந்துக்கள் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், நிலம் இந்துக்களுக்கு சொந்தமானதுதான். ஆனால் இஸ்லாமியர்களின் கல்லறை அருகிலிருந்ததால் அவர்களுக்கே கொடுத்துவிட்டோம் என கூறியுள்ளார். மொத்தமாக 8 இந்துக்கள் இணைந்து அவர்களின் நிலத்தை வழங்கியுள்ளனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.