• July
    22
    Monday

Main Area

Main



ஏலத்திற்கு வந்த கேப்டனின் சொத்துக்கள்: அதிர்ச்சியில் தேமுதிகவினர்!

விஜயகாந்த்
விஜயகாந்த்
Loading...

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்தின் சொத்துக்கள்  ஏலத்திற்கு வந்துள்ளதாக செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவால் தீவிர அரசியலிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்று வந்த விஜயகாந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மக்களின் முன் தோன்றினார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவினர் விஜயகாந்த் என்ற ஆளுமையை தேர்தல்  பிரசாரத்தில்  ஈடுபடுத்தி பரிதாப வாக்குகளை வாங்க முயற்சி செய்தது. ஆனால்  அவர்களின் எண்ணத்திற்கு மாறாக தேர்தலில் படு தோல்வி அடைந்ததால் மனதளவிலும் சோர்ந்து போய் விட்டனர் தேமுதிகவினர்.  இனியும் கட்சியை கரைசேர்க்க முடியுமா? கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ? என கலக்கத்தில் விஜயகாந்த் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

viajyakanth

இந்நிலையில் தேர்தல் தோல்வியிலிருந்தே மீளாத தேமுதிகவினருக்கு மேலும் ஒரு செய்தி இடியாக மாறியுள்ளது. ஆம் விஜயகாந்தின் சொத்துக்கள் சில தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதாவது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெற்ற  ரூ.5.52 கோடி கடன் தொகையை செலுத்த முடியாத காரணத்திற்காக அவரின் சில சொத்துக்கள் அடுத்தமாதம் 26ஆம் தேதி ஏலத்தில் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெயரில் விளம்பரம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

prob

அதில், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில்  விஜயகாந்த மற்றும் பிரேமலதா ஆகியோர் பெயரில் உள்ள ஆண்டாள் அழகர் எஜுகேஷ்னல் டிரஸ்ட், அசையா சொத்துக்களான  சென்னை சாலிகிராமம் வேதவள்ளி தெருவில் விஜயகாந்த் பெயரில் உள்ள  10,271 சதுர அடி கொண்ட வணிக கட்டிடம்,  கண்ணபிரான் தெருவில் உள்ள 3013 சதுர அடியுள்ள  காலி  வீட்டுமனை ஆகியவை ஏலத்திற்கு வரவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

vijayakanth

சினிமாவில் நடித்து, பெரிய நடிகராகி, சட்டமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக நுழைந்து கம்பீரமாக வலம் வந்த கேப்டனுக்கு ஏன்  இந்த நிலை என்று தேமுதிகவினர் கலங்கிப்போயுள்ளனர். இது  இந்த செய்தி குறித்த உண்மை தன்மை என்னவென்பது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2018 TopTamilNews. All rights reserved.