• July
    20
    Saturday

Main Area

Main



'பஸ் டே' நிகழ்வை செம கலாய் கலாய்த்த விவேக்!

பஸ் டே
பஸ் டே
Loading...

சென்னை: நடிகர் விவேக்  'பஸ் டே' நிகழ்வை கலாய்க்கும் விதமாக பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

பொதுவாகப் பேருந்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டூழியத்தை பட்டியல் இடவே முடியாது. சாதாரண நாட்களிலே இந்த நிலைமை என்றால் அப்போ பஸ் டே நாளில் எப்படி இருக்கும். இதனால் போலீசார்  பஸ் டே கொண்டாடக்கூடாது என்று தடை விதித்திருந்தது. 

ஆனால் இந்த முறை தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் கொண்டாடியுள்ளனர். பேருந்துக்கு அலங்காரம் செய்து 100க்கும் மேற்பட்டோர் பேருந்து படியில் தொங்கியும், மேற்குறையில் அமர்ந்தும் அராஜகம் செய்துள்ளனர். அப்போது எதிர்ப்பாரா விதமாக பேருந்து மேல் இருந்த மாணவர்கள் சிலர் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக  பரவி வந்தது. உடனே அது குறித்து பலரும் மீம்ஸ் மூலம் அந்த நிகழ்வை கலாய்த்துத் தள்ளினர். 

இந்த நிலையில் அந்த விடியோவை பார்த்த நகைச்சுவை நடிகர் விவேக்  தனது ஸ்டைலில் அவர்களை கலாய்க்கும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த மீம்,விவேக் படிக்காதவன் படத்தில் அடிவாங்கிக்கொண்டு வருவாரே அதை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது தற்போது வைரலாக பரவி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.