• May
    26
    Sunday

Main Area

Main



எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்; கலெக்டரிடம் மனு கொடுத்த கோவை மாணவி?

மாணவி தமிழ் ஈழம் - ஓவியா
மாணவி தமிழ் ஈழம் - ஓவியா
Loading...

கோவை: தமிழ் ஈழம் எனும் கோவை மாணவி துப்பாக்கி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி வரும் வேளையில், தமிழ் ஈழம் எனும் கோவை மாணவி தன் தங்கை ஓவியாவுடன் துப்பாக்கி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார் தமிழ் ஈழம். இவர் கலெக்டருக்கு அளித்த மனுவில், பொள்ளாச்சி கொடூரம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையால் கூட இத்தனை ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாத அளவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது அல்லது அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்ட்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும் என் தங்கைக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையின் மெத்தனப் போக்கையும், தமிழகம் பெண்களுக்கு அச்சுறுத்தலான மாநிலமாக மாறியிருப்பதையும் தமிழ் ஈழம் வழங்கிய மனு சுட்டிக் காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த தமிழக அரசாங்கம் விரைந்து நடிவடிக்கை எடுக்குமா?..

2018 TopTamilNews. All rights reserved.