• June
    27
    Thursday

Main Area

Main



இடி இடிக்கும் போது ‪‎ஏன் ‘அர்ஜுனா அர்ஜுனா’ என்று சொல்லச் சொல்கிறார்கள்?

இடி
இடி
Loading...

ஏன் இந்து மதத்தை இத்தனை ஆண்டுகளாய் கடல் கடந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்? ஏனெனில், ஆன்மிகத்தோடு அறிவியலையும் இணைத்து நெறிமுறைகளை இந்து மதம் வகுத்து வைத்திருக்கிறது. 

lighting

குழந்தைகள் நிறைந்த வீடுகளில், மழை பெய்கிற சமயங்களில் இடி சப்தம் கேட்கும் பொழுது, பெரியவர்கள் ‘அர்ஜுனா... ’ என்றதும், இன்றைய வாண்டுகள் ‘இடிதாங்கி எல்லாம் கண்டுபுடிச்சு வருஷக்கணக்காவுது... இன்னமும் அர்ஜுனான்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க’ என்பார்கள்.

இடி இடிக்கும் சமயங்களில், ‘அர்ஜூனா... அர்ஜூனா...’ என்று சப்தமாக அழைப்பதால் அர்ஜூனன் ஒன்றும் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு இடி சத்தமே இல்லாமல் செய்து விடப் போவதில்லை தான். ஆனால் எங்கோ வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அந்த சமயத்தில் மழை பெய்து, ஒதுங்க இடம் கிடைக்கும் போது இடி இடித்தால், வாய் விட்டு, ‘அர்ஜூனா... அர்ஜூனா...’ என்று சொல்லும் போது இடியினால் ஏற்படும் காதடைப்பிலிருந்து தப்புவதற்கு அது ஒரு அறிவியல் உபகரணமாக அமைகிறது.

ear

இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காதுகள் அடைத்து ‘ஙொய்ங்’ என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
‘அர்’ என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
‘ஜு’ என்று சொல்லும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.
‘னா’  என்று சொல்லும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத் தான் ‘அர்ஜுனா’வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.