• July
    16
    Tuesday

Main Area

Main



நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் ஆப்கன் முஸ்லீம் கொலை: மோசமான வெள்ளிக்கிழமை என்று மகன்கள் கதறல்!

கொலை செய்யப்பட்ட ஹாஜி தவுத் நபி
கொலை செய்யப்பட்ட ஹாஜி தவுத் நபி
Loading...

நியூசிலாந்து:  நியூசிலாந்து தாக்குதலில், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த முதல் முஸ்லீம் கொல்லப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பயங்கர தாக்குதல்:
ttn

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்திய  குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட் என்ற இளைஞர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் முஸ்லீம்
ttn

இந்நிலையில் இந்த சம்பத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த முதல் முஸ்லீம் கொல்லப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாஜி தவுத் நபி என்ற 71 வயதான முதியவர் கடந்த  1977 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இதையடுத்து கடந்த 42ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வந்த இவர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் முஸ்லீம் நபர் என்று கூறப்படுகிறது. இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
ttn

தங்களது தந்தையின் மரணத்தை உறுதிப்படுத்திய அவரது இரண்டு மகன்களும் அந்நாட்டு நீதிமன்றத்தின் வெளியே தந்தையின் புகைப்படத்தை வைத்து கொண்டு போராட்டம் செய்தனர்.அவர்கள்  மட்டுமல்லாது இந்த கொடூர தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எங்கள் வாழ்க்கையின் மோசமான வெள்ளிக்கிழமை இது... 
sons ttn

இது குறித்து கருத்து தெரிவித்த ஹாஜி தவுத் நபி மகன்கள்,  'எங்கள் வாழ்க்கையின் மோசமான வெள்ளிக்கிழமை இது. வழக்கம்போல மசூதிக்கு சென்ற அவர் திரும்பிவரவில்லை. மூர்க்கத்தனமாக நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்' என்று உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.