• July
    22
    Monday

Main Area

Main



11,000 ரன்களை அதிவிரைவாக பூர்த்தி செய்து சச்சினை பின்னுக்கு தள்ளிய கோலி!

Virat Kohli
Virat Kohli
Loading...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் அடித்து 11,000 ரன்களை பூர்த்தி செய்தார்  வீரர் விராட் கோலி. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்திய அணி சார்பாக களிமிறங்கிய ரோகித் சர்மா 140 ரன்களுடனும்,  ராகுல் அரை சதத்துடனும் வெளியேறினர். விராட் கோலி 70 ரன்களுடனும் அதி தீவிரமாக விளையாடினர்.  இந்த கோட்டியில் விராட்கோலி புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார். 276 இன்னிங்கிஸில் 11 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்திருந்த சச்சினை, பின்னுக்கு தள்ளி 54 இன்னிங்ஸ்கள் குறைவாக 11 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார் விராட்..  

2018 TopTamilNews. All rights reserved.