காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : கார்கே கண்டனம்..!
ஜம்மு காஷ்மீர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டணம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஶ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு புலம்பெயர் பணியாளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உள்ளூர் மருத்துவர் உள்ளிட்ட வெளியூரைச் சேர்ந்த நெடுஞ்சாலை தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “கோழைத்தனமான மற்றும் இழிவான செயல். இத்தகைய வன்முறைச் செயல்கள் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை தடுக்காது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


