"மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும்" -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 
tn

 பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்துள்ளார்.  பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.


இந்நிலையில் கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம். ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம்.கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர்கல்வி பெறுவது 28% அதிகரித்துள்ளது  என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இதோ :-

"40,000 ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்"

மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக்குழு

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்

மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும்

தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பாதுகபாப்பு துறைக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிப்பு; ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா 2 இடங்களில் தொடங்கப்படும் 

பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம். மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர் 

ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம்

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்; சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு