இந்தியாவில் 1000 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

 
Covid india

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை முதல் அலை ,இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனிடையே நான்காவது அலை ஜூலை மாதத்தில் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

Corona

இந்தியாவில் கடந்த 24 மணி  நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று  1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. அதேபோல் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில்  81 பேர் பலியாகியுள்ள நிலையில்,  கொரோனவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,345 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 1,447 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை இதன் மூலம் 4 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரத்து 773 ஆக உள்ளது. தற்போது வரை இந்தியாவில் 13,013 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் இந்தியாவில் இதுவரை 1,84,66,86,260 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.