சபரிமலையில் கூட்ட நெரிசல்- 12 வயது சிறுமி உயிரிழப்பு

 
சபரிமலை

சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியிலேயே 12 வயது சிறுமி  தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tragedy in Sabarimala 10 years old girl from Tamil Nadu dies: திருப்பதி  மாடல் க்யூவை பின்பற்றியும் இப்படி ஒரு துயரமா? சபரிமலையில் பரிதாபமாக  உயிரிழந்த 10 வயது தமிழக ...

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள். தற்போது முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம் என்று உள்ளடு. நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் 35 ஆயிரம் பேர் செய்கிறார்கள், மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை தினமும் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய காரணத்தினால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும்போது அப்பாச்சிமேடு பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி நிலை குலைந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறுமிக்கு ஏற்கனவே இதய பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. சில நாட்களாக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.