கோர விபத்து! பாலத்தின் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்த பேருந்து - 15 பேர் பலி!

 
accident

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம் அடைந்தனர். 

மத்திய பிரதேச மாநிலாம் கார்கோனில் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடம் ஒரு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கார்கோனில் பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து தாறுமாறாக ஓடியுள்ளது. ஒருகட்டத்தில் அந்த பேருந்து பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கீழே கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் அந்த பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடனடியாக பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம் அடைந்தனர். 

பேருந்து விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க  உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பேருந்து கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.