ஒடிசா ரயில் விபத்து - 15 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகள் நிறைவு

 
train accident

ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
 அப்போது, அந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வேகமாக வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.