திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 160 பேர் மரணம்!

 
corona

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த பாதிப்புகள் 20 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது மத்திய, மாநில அரசுகளை பெருமூச்சு விடச் செய்தது. எனினும், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. அதே வேளையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தடுப்பூசி நிலவரம் 99.64 கோடியாக இருந்த நிலையில் இன்று 100 கோடி தடுப்பூசி என்னும் இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது. 

corona update

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தியட்தில் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசி செலுத்தி உத்தரகண்ட் சாதனை சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனையை நிகழ்த்தியிருப்பினும் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும் 160 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 17,561 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் 1,78,831 பேர் சிகிச்சையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குணமடைவோர் விகிதம் 98.15% ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.