இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு - அதிர்ச்சியில் மத்திய அரசு!!

 
corona

இந்தியாவில் மேலும்  ஒருவருக்கு  ஒமிக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona update

தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய புதிய வகை உருமாறிய கொரோனா  வைரஸ் ஒமிக்ரான்  பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.  குறிப்பாக இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் இல்லை என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில்,  கர்நாடகாவில் இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தி தொற்று இல்லை என முடிவானாலும், அவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது.

corona virus

 இதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இவர் ஜிம்பாப்வே நாட்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா வழியாக இரண்டு நாட்களுக்கு முன் குஜராத் வந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.  இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

corona

இந்நிலையில் டெல்லியில் ஒருவருக்கு  ஒமிக்ரான்  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்தவருக்கு  ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  டெல்லியில் ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு கொரோனா  உறுதியான நிலையில்,  அதில் ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது.