34 மாணவ, மாணவிகள் தற்கொலை! ஆறுதல் நேரலை பாதியில் நிறுத்தம்

 
ss

6 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் இரண்டு லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.  இதில் விரக்தியடைந்த 34 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்தது.  அம்மாநிலத்தில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.  

 கடந்த 3 ஆம் தேதியன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   அதில் 70.70 சதவிகித மாணவிகளும்,  44.02 சதவிகித மாணவர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.   4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்த நிலையில்,  2 லட்சம் மாணவ மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். இதில்,  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

su

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆறுதல் கூறி வந்தார். 

 அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் , கட்சி நிர்வாகிகள் லோகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.  இதனால் அந்த ஆறுதல் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது .

தேர்வில் தோல்வி அடைந்ததற்காக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில்  பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இதனால் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து , தன்னம்பிக்கை அளித்து தற்கொலை எண்ணம் வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.