புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமிக்ரான் - இரண்டு பேருக்கு தொற்று உறுதி!!

 
corona

புதுச்சேரியில் முதல்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு ,கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா ,ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், அரியானா ,உத்தரகாண்ட் ,ஜம்மு-காஷ்மீர் ,உத்தரப் பிரதேசம், கோவா,இமாச்சல பிரதேசம், லடாக் ,மணிப்பூர் என கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுவரை 186 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

corona

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டுள்ள இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில் தற்போது  ஒமிக்ரான் பரவி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.