ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் எல்லையோர மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவி வருகின்றனர். அவ்வாறு இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுபிடிக்கின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை வலைவீசி தேடினர். இந்த நிலையில், அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பக்கி சூடு நடத்தினர்.
இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி அவர்களை சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


